மட்டக்களப்பில் மூவருக்கு கொரோனா உறுதி..!!!

மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்றைய தினம் மூவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஏ.லதாகரன் தெரிவித்தார். பெரிய போரதீவு – பட்டாபுரம் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவருக்கும், வாழைச்சேனை பகுதியைச் சேர்ந்த இருவருக்கும் தொற்று அடைமயாளம் காணப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா தொற்றை தடுப்பதற்காக தேசிய இளைஞர் சேவைகள் மன்றம், பொதுச் சுகாதார திணைக்களம் மற்றும் பொலிஸார் இணைந்து கொரோனா தடுப்பு விழிப்புணர்வுகளை பொதுமக்களுக்கு வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.